/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/John mahendran.jpg)
சசிகுமார் நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. பெரிதளவு ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் பலரது கவனத்தை பெற்றது.
இப்படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான சசிகுமார் “இந்த படத்தை பார்ப்பதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்போது இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் இருந்திருந்தால் இந்த படத்தை பார்த்து பாராட்டியிருப்பார்.இயக்குநரின் தொடர்பு எண்ணை வாங்கிப் பேசிப் பாராட்டி மகிழ்ந்திருப்பார்” என்றார்.
இந்நிலையில், இயக்குநர் சசிகுமார் பேசியதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் இயக்குநர் ஜான் மகேந்திரன்,“பாலுமகேந்திரா சார் இறந்தபோது, மயானத்திற்கு செல்ல வேண்டிய வாகனத்தில் ஏற முடியாமல் அப்பா தவித்த போது, சசிகுமார் சாரும்சமுத்திரக்கனி சாரும் குனிந்துதங்கள் தோள்பட்டையில் அப்பாவின் காலை வைக்கச் சொல்லி தூக்கி சுமந்தார்கள். இன்று அப்பாவின் நினைவுகளை மனதில் சுமக்கிறார்கள்” எனஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் நினைவு கூர்ந்து பகிர்ந்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)