Advertisment

அவர் ஒரு கோடி கொடுத்திருக்காரு, நீங்க என்ன கொடுத்தீங்க ராஜு பாய்? - எச். ராஜாவை விமர்சித்த பிரபல இயக்குநர்!

gfegaega

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசுக்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகுமார், சூர்யா குடும்பம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த சிவகுமார் குடும்பம், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார்கள். இதற்கிடையே சென்ற ஆண்டில் நடந்த விருதுவிழா ஒன்றில், பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. அதை நன்கு பராமரித்து வருகிறார்கள். அதேபோல் பல்வேறு கோயில்களுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள், வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவுசெய்து அதே தொகையை பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்.

Advertisment

ffdbhdfshsd

எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று நடிகை ஜோதிகா கூறினார். ஜோதிகாவின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், சில தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில், பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச். ராஜா சூர்யா - ஜோதிகாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தற்போது முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகுமார், சூர்யா - ஜோதிகா குடும்பம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, விஜய் நடிப்பில் வெளியான 'சச்சின்' படத்தை இயக்கியவரும், இயக்குநர் மகேந்திரனின் மகனுமான ஜான் மகேந்திரன், சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "(எச் ராஜா) இந்துக்கள் மனதை புண்படுத்துறாங்கன்னு நீங்க சொன்ன சூர்யா ஒரு கோடி கொடுத்திருக்காரு, நீங்க என்ன கொடுத்தீங்க ராஜு பாய்?" என பதிவிட்டுள்ளார்.

john mahendran H Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe