John kokken joining ajith ak61 film

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாககூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புதொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படம் குறித்தபுதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக ஜான் கொக்கின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சர்பேட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில்நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் கே.ஜி.எஃப் படங்களிலும் நடித்துள்ளார். இவர்தற்போது அஜித்திற்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment