Advertisment

''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...!'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்!

பிக்பாஸ் மீரா மிதுனுக்கும், அவருடைய முன்னாள் தொழில் முறை பார்ட்னர் ஜோ மைக்கிலிற்கும் நடந்துவரும் பணிப்போர் காரணாமாக இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்துவரும் நிலையில் இந்த பிரச்சனை குறித்து ஜோ மைக்கில் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் விளக்கம் அளித்து பேசியபோது...

Advertisment

jo micheal

''மாதர் சங்கம் என்பது ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் குழு. அதேபோல் ஒரு பெண்ணால் ஒரு ஆண் பாதிக்கப்பட்டால் அந்த பெண்ணை கண்டிக்கும் கடமையும் மாதர் சங்கத்திற்கு உண்டு. ஆனால் அப்படி நம் சமூகத்தில் நடக்கிறதா..? பிக்பாஸில் மீரா மிதுன் சேரன் மேல் தப்பான புகார் அளித்தார். அது நிரூபிக்கவும் பட்டது. அதேசமயம் சரவணன் எப்போதோ செய்த தவறை ஒப்புக்கொண்டதற்கு மாதர் சங்கம் போர்க்கொடி தூக்கியது. நியாயப்படி பார்த்தால் மீரா மிதுன் செய்த தவறுக்கும் மாதர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் மீரா மிதுன் விஷயத்தில் மௌனம் காப்பது தவறு. அதேபோல் மாதர் சங்கம் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்றால் மீரா மிதுனுக்கு உள்ள பின்புலன் தான் காரணம். மீரா மிதுனுக்குப் பின்னால் காங்கிரஸ் பெண்கள் அமைப்பின் பொது செயலாளராக இருக்கும் திருநங்கை அப்சரா ரெட்டி இருக்கிறார். அவர் இருக்கும் தைரியத்தில் தான் மீரா மிதுன் இவ்வளவு தவறுகள் செய்துகொண்டிருக்கிறார். என் விஷயத்திலேயே அப்சரா நேரடியாக என்னை தாக்கமுடியாத காரணத்தினால்தான் மீரா மிதுனை ஏவி விட்டு என்னை காலி செய்யப்பார்க்கிறார். நான் என் பிரச்சனையை இதோடு விடப்போவதில்லை. ஆண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்'' என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/btttspfT9so.jpg?itok=9X0wvShj","video_url":" Video (Responsive, autoplaying)."]}

bigg boss 3 meera mithun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe