Advertisment

"என்ன தலைவரே... திரும்பவும் லூப்பா" - கவனம் ஈர்க்கும் எஸ்.ஜே சூர்யா வெளியிட்ட ட்ரைலர்

jiivi 2 trailer released by sj surya

கடந்த 2019-ஆம் ஆண்டு கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான படம் 'ஜீவி'. வெற்றிவேல் சரவணா சினிமாஸ் தயாரித்திருந்த இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா, கருணாகரன், ரோகினி மற்றும் மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிவியல் கலந்து த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பலரது கவனத்தை பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் 'ஜீவி 2' உருவாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய கோபிநாத் என்பவரே இயக்கியுள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="99dcbc65-3555-4cca-b46f-7eb09a6aa4e2" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_24.jpg" />

Advertisment

இந்நிலையில் 'ஜீவி 2' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "என்ன தலைவரே திரும்பவும் லூப்பா. ஆனா இது வேற மாதிரி இருக்கே" என குறிப்பிட்டு ட்ரைலரை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அறிவியலை பற்றி இன்னும் விரிவாக பேசும் வகையில் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

trailer.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe