jiiva's next titled as varalaru mukkiyam

நடிகர் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

அண்மையில் வெளியான '83' படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ஜீவா. இதனைத்தொடர்ந்து தற்போது 'கோல்மால்', 'மேதாவி', உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு 'வரலாறு முக்கியம்' எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளதோடு, இப்படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. வடிவேலுவின் பிரபலமான வசனத்தை படத்தின் தலைப்பாக வைத்துள்ளது தற்போதே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

'சிவா மனசுல சக்தி' போன்று நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகும் இப்படத்தில், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்திரி தயாரிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விரைவில் டிரைலர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.