வெங்கட் பிரபுவுடன் இணையும் ஜீவா - வெளியான லேட்டஸ்ட் தகவல்

jiiva in venkat prabhu naga haitanya movie

வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து 'என்.சி 22' படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'என்.சி 22' படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக வெங்கட் பிரபுடன் ஜீவா இணைகிறார். ஜீவா, கடைசியாக '83' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து சுந்தர்.சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' படத்தில் நடித்துள்ள ஜீவா தற்போது 'கோல்மால்', 'வரலாறு முக்கியம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

jiiva venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe