Advertisment

'இனி யானை மாதிரி நா எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியிற மாதிரி இருக்கும்' - பன்ச் பேசும் ஜீவா !

jiiva

Advertisment

சங்கிலி புங்கிலி, கலகலப்பு 2 ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது கீ, கொரில்லா, ஜிப்ஸி படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் ஜீவா தன் ஹிந்தி பட பிரவேசம் குறித்து பேசும்போது...."சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கின்றன. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக 'SGF 90' படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பட டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமாக இருக்கும். "1983 வேர்ல்ட் கப் " என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறேன். ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீனில் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியதோ அதுபோல் இந்த படமும் இருக்கும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

100 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கின்ற படம் இது. நான் கிரிக்கெட்டில் ரொம்ப ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் விளையாடி ஜெயிதந்துள்ளேன். அப்படிப் பட்ட எனக்கு கிடைத்த முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம் என்று சொல்லும் போது எப்போது கேமரா முன் நிற்போம் என்று ஆர்வமாக இருக்கின்றது. 1983ல் இந்தியா வேர்ல்ட் கப் ஜெயித்து பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம். கிட்டத்த 100 நாள் லண்டனில் ஷுட்டிங் நடைபெறவுள்ளது. அப்போது அந்த டீமில் இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். நான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றது எனக்கு பெருமை தானே. தமிழ் நாட்டு வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் நான்கு பேர் தான். அந்த கேரக்டர் எனக்கு கிடைத்தது பெருமையான விஷயம் தானே. மே மாதம் லண்டனில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. இனி யானை மாதிரி நான் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பதிகின்ற மாதிரி இருக்கும். 2019 எனக்கு மட்டுமில்லாமல் சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும் என்று நிறைய நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

jiiva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe