jiiva speech at five six seven eight web series press meet

ஜீ5 நிறுவனம் சமீபத்தில் தமிழ் ஒரிஜினல் சீரீஸ் 5678 என்ற தொடரை வெளியிடவுள்ளது. ஏ.எல்.அழகப்பன், ஹிதேஷ் தாக்கூர் தயாரித்துள்ள இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளஇத்தொடர் நாளை (18.11.2022) ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளது படக்குழு. இதில் ஜீவா, இயக்குநர் பாலா, ஏ.எல் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

அப்போது நடிகர் ஜீவா பேசுகையில், "ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட், டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்தத்தொடரில் நிறையபுதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக" எனப் பேசினார்.

Advertisment

இயக்குநர் ஏ.எல் விஜய் பேசுகையில், "பாலா சார் எனது மானசீக குரு அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்தத்தொடருக்கு மூன்று ஹீரோ பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிகத்தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இதுதான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.

இயக்குநர் பாலா பேசுகையில், "எனது உதவியாளர் மிருதுளா இந்தத்தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்தத்தொடர் பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்" என்றார்.