Advertisment

யார் இந்த ஹீரோயின் கண்டுபிடியுங்கள்?- ஜீவா 

கடந்த 2018ஆம் ஆண்டு கலகலப்பு-2 ஹிட்டை தொடர்ந்து கீ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்கள் வெளியாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார் ஜீவா. இதனையடுத்து கோரில்லா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

jiiva

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

1983ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி கபில் தேவ் தலைமையில் எப்படி உலகக்கோப்பையை வென்றது என்பதை பாலிவுட்டில் 83என்ற தலைப்பில் எடுக்கிறார்கள். இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க அவருடன் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழக நடிகர் ஜீவா நடிக்கிறார். தற்போது அந்த படத்திற்கான கிரிக்கெட் பயிற்சியில் கலந்துகொண்டிருந்தார் ஜீவா. அந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்நிலையில் நடிகர் ஜீவா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் ஒரு பெண் போன்ற தோற்றத்தில் ஒருவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். ஜீவா கோட் சூட் அணிந்து ஃபார்மலாக இருக்கிறார். புகைப்படத்துடன் இந்த ஹீரோயின் யார் என்பதை கண்டுபிடியுங்கள் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். பலரும் யார் அந்த ஹீரோயின் என்று தெரியாமல் தலையை பிச்சுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்த பதிவில் இது நடிகை அல்ல, காமெடியன் சதீஸ் என்று கூறி வருகிறார்கள்.

jiiva sathish
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe