Advertisment

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'பிளாக்'

jiiva priya bhavani shankar starring black

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் திரைப்படம் பிளாக். இப்படத்தை அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணி இயக்க சாம் சி.எஸ்.இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர் பாலசுப்ரமணி கூறுகையில், “ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படி பட்ட கதை தான் பிளாக்.

Advertisment

நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும்” என்றார்.

priya bhavani shankar jiiva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe