‘இங்க நடப்பது எதுவுமே உண்மை இல்லை’ - ஒரு நாள் இரவு நடக்கும் கதையில் ஜீவா 

jiiva  Priya Bhavani Shankar black trailer released

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிளாக்’. பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். ஷாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில் விவேக் பிரசன்னா, யோக் ஜபே, ஷரா, ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானதையடுத்து இந்தாண்டு செப்டம்பரில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘பிளாக்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் ஜீவாவும் பிரியா பவானி சங்கர் இருவரும் வெக்கேஷனுக்காக ஒரு புதிதாக கட்டப்பட்டுள்ள ப்ரீமியம் விலாஸ் என்ற இடத்திற்கு செல்கின்றனர். அங்கு சில அமானுஷ்யமான சம்பங்கள் அவர்களுக்கு நடக்க அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை ஹாரர் கலந்த த்ரில்லர் ஜானரில் இப்படம் அமைந்துள்ளது போல் தெரிகிறது. ட்ரைலரின் இறுதியில் ‘கல்யாணம் ஆன 7 வருஷத்தில பொண்ணுக்கு எதாவது ஆனாலோ... காணாமல் போனலோ முதல் சஸ்பெக்ட் கணவன் தான்’ என்று ஜீவாவிடம் போலீஸ் ஒருவர் எச்சரிப்பதுபோல் முடிவடைகிறது. இப்படம் ஒரு நாள் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இப்படம் செப்டம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ட்ரைலரில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரீலிஸ் தேதி ட்ரைலரில் இடம்பெறவில்லை, அதற்கு பதிலாக இப்படம் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jiiva priya bhavani shankar
இதையும் படியுங்கள்
Subscribe