jiiva to play guset role in mohanlal Malaikottai Vaaliban

Advertisment

மலையாளத்திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போது 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'ஜல்லிக்கட்டு' படம் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தலிஜோ ஜோஸ் பெலிச்சேரிஇயக்க, படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாவதாகவும்முழு படப்பிடிப்பும் ராஜஸ்தானில் நடக்கவுள்ளதாகவும்சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ரஜினி நடிப்பில் தமிழில் உருவாகும் 'ஜெயிலர்' படத்திலும்மோகன்லால் நடித்து வருகிறார். 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில்சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரேடி,கதா நந்தி உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில்கமல்ஹாசன் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்தநிலையில் நடிகர் ஜீவாவும் இப்படத்தில்கமலுடன் இணைந்து கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில்சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'கீர்த்தி சக்ரா' படத்தில்ஜீவா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது 16 வருடம் கழித்து மீண்டும் மோகன்லால் படத்தில் நடிக்கவுள்ளதாகத்தெரிகிறது.