/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/245_11.jpg)
ஜீவா நடிப்பில் கடைசியாக 'வரலாறு முக்கியம்' படம் வெளியானது. பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த 'கஸ்டடி' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அர்ஜுன் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜீவா நடிக்கும் புது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் பேசப்படுகிறது.
கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'டாடா' படம்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார் கணேஷ் கே பாபு. இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு ஜீவா படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)