/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/444_52.jpg)
ஜீவா கடைசியாக பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபரில் வெளியகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாடாலாசிரியர் மற்றும் இயக்குநர் பா.விஜய் இயக்கத்தில் பெயரிடாத ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் அர்ஜூன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வேல்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியுள்ளது. படத்திற்கு அகத்தியா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2025 ஜனவரி 31 தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனர் மற்றும் தலைவர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “திகில்-த்ரில்லர் ஜானர் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, 'அகத்தியா' மூலம் இந்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். 'அகத்தியா' கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)