Advertisment

ஜீவாவின் புதிய படத்திற்கு பூஜை 

jipsy

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பா.இரஞ்சித், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கீ, கொரில்லா படங்களை தொடர்ந்து ஜீவா இப்படத்தில் நடிக்கிறார். ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைகிறார். யுகபாரதி பாடல்களை எழுத, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்திற்கு, கலை இயக்குநராக பணியாற்றுகிறார். நாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
jiiva jipsy rajumurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe