jiiva new movie announced

'காஃபி வித் காதல்', 'வரலாறு முக்கியம்' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜாகுவார் ஸ்டூடியோஸ்தயாரிப்பில் பிரபல கன்னட இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்மால்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஜீவா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிகண்டன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் பூஜை நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.

Advertisment

முன்னதாக பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.