ஜீவா கடைசியாக பா.விஜய் இயக்கத்தில் ‘அகத்தியா’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் புது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். இவர் ஜீவாவை வைத்து ஏற்கனவே ‘பிளாக்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து மீண்டும் இருவரும் இணையும் படம் ஜீவாவின் 46வது படமாக உருவாகிறது.
ஜீவாவின் 46 வது படத்தை கே.ஆர். குருப் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரபியா கட்டூன் நாயகியாக நடிக்கிறார். பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
பூஜை விழாவில் விஷால், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி, திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இப்படத்தில் மற்ற விபரங்கள் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.