jiiva as cm jegan mogan reddy in yatra 2

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில், ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு கண் தெரியாத நபர், ஜெகன் மோகன் ரெட்டி படம் பொருந்திய பதாகை வைத்துக்கொண்டு இரவுநேரத்தில் உட்காந்திருக்கிறார். அவரிடம் ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்கும்ஜீவா பேசும் காட்சி வருகிறது. பின்பு அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த முரண்பாடுகள் குறித்த காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து அவர் நடத்திய யாத்ரா, சட்டமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் என நீள்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.