1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கபில் தேவ் தலைமையில் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலகக்கோப்பையை வென்றது. இந்த வரலாற்றை வைத்து பாலிவுட்டில் ‘83’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயராகிறது.

Advertisment

jiiva

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இப்படத்தை ‘பஜ்ரங்கி பைஜான்’,‘எக்தா டைகர்’ உள்ளிட்ட பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொடுத்த கபீர் கான் இயக்குகிறார். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் இதை தயாரிக்கிறது.

பத்மாவத், சிம்பா, கல்லி பாய் என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளுக்கு பின் ரன்வீர் சிங், இந்த படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழக நடிகர் ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த படத்திற்காக தர்மசாலாவில் 15 நாட்கள் பயிற்சி வகுப்பில் நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். படத்தில் கிரிக்கெட் வீரர்களாக நடிப்பதால் கிரிக்கெட் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் ஜீவா ரன்வீர் சிங்குடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.