'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. ஜீவாவின் தந்தையானஆர்.பி.சௌத்ரியின் 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரித்தது.
இதனைத் தொடர்ந்து 'ராம்','கற்றது தமிழ்', 'சிவா மனசுல சக்தி', 'கோ' உள்ளிட்ட வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களில் நடித்தார் ஜீவா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஜிப்ஸி' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், தனது தந்தையின் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் கழித்து நடிக்க உள்ளார் ஜீவா. இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு, தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சசியிடம் உதவியாளராகப் பணியாற்றிய சந்தோஷ் ராஜன்இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில், ஜீவாவுடன் காஷ்மீரா பர்தேஷி, ப்ரயாகா நாக்ரா, வி.டி.வி கணேஷ், சித்திக், ஷா ரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கடைசியாக, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' ஜீவாவை வைத்து 'ரௌத்திரம்' என்னும் திரைப்படத்தைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.