Skip to main content

‘டெரரிஸ்ட் டிராக்கர்’ தொழில்நுட்பத்தில் ‘ஜிகிரி தோஸ்த்’

 

jigiri dhosth movie update

 

பிரபல நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஜிகிரி தோஸ்த்’. இப்படத்தில் அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரண்.வி இயக்கி நடித்தும் உள்ளார். மேலும் பிரதீப் ஜோஸோடு இணைந்து தயாரித்தும் உள்ளார். இவர் ஷங்கரின் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். அஷ்வின் விநாயகமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 

இப்படம் மூன்று நண்பர்கள் அவுட்டிங் செல்லும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். பிறகு, அந்த பெண்ணை கேங்ஸ்டரிடம் இருந்து காப்பாற்றினார்களா என்பதே படத்தின் கதையாக உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘டெரரிஸ்ட் டிராக்கர்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். அதை சிறப்பம்சமாக சொல்கின்றனர்.

 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 

 

 

மிஸ் பண்ணிடாதீங்க