Advertisment

இரண்டாம் பாகத்திற்கு இரண்டு பிரபல ஹீரோக்களை புக் செய்த கார்த்திக் சுப்புராஜ்

jigarthanda 2 Raghava Lawrence playing lead role

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'ஜிகிர்தண்டா'. கேங்ஸ்டர் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக படத்தின் வில்லன் கதாபாத்திரமான 'அசால்ட் சேது' கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="dc29afe9-d8e5-4c39-9fc6-6c9a2de784e1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_29.jpg" />

ரஜினிகாந்த் கூட படக்குழுவினருக்கு அலைபேசியில் அழைத்து பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தை தன்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் எனக் கூறினார். மேலும் அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா வென்றார். தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

Advertisment

கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஜிகிர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்க்ரிப்ட் பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் மலையாள நடிகை நிமிஷா சஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜை மதுரையில் வருகிற 11ஆம் தேதி (11.12.2022) நடைபெறவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்க்கிறார் ராகவா லாரன்ஸ்.

actor raghava lawrence karthik subbaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe