Jiah Khan case final order

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'நிஷாப்த்' (Nishabd) படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை ஜியா கான். பின்பு அமீர்கான் நடித்த 'கஜினி' மற்றும் அக்‌ஷய் குமார் நடித்த ‘ஹவுஸ்ஃபுல்’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டார். இது தொடர்பாக அவர் எழுதியஆறு பக்க கடிதத்தின் அடிப்படையில் அவரது காதலன் பஞ்சோலியை போலீஸார் கைது செய்தனர். அந்த கடிதத்தில் பஞ்சோலியால் மனம் மற்றும் உடல் ரீதியாகத்துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்த வழக்கில் ஜியா கானின் தாயார் ரஃபியா, தன் மகள் கொலை செய்யப்பட்டதாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார். நடிகையின் காதலன் சூரஜ் பஞ்சோலியிடம் விசாரணை நடைபெற்று வந்து நிலையில், 1 மாதம் கழித்து சூரஜ் பஞ்சோலி ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, ஜியாவின் தாய் ரஃபியா, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிரா காவல்துறையிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

நீண்ட வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சிபிஐ நீதிமன்றத்தில் வந்தது. அப்போது சூரத் பாஞ்சாலிக்குஎதிராக எந்த ஒரு ஆதாரங்களும்இல்லை எனக் கூறி சூரஜ் பஞ்சோலியை குற்றமற்றவர் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அவரை விடுவித்து இந்த வழக்கை முடித்து வைத்தது.