jack sparrow

Advertisment

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்றால் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தெரியும். இவர் நடித்த படங்கள் பலவற்றிலும் இவர் கதாபாத்திரத்திற்காக எடுத்துக்கொள்ளும் சிரமங்களும், ஒப்பனைகளும் உலகரங்கில் பேசப்படுகின்றன. இதனால் இவருக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் 15 வருடங்களாக நடித்து வந்த ஜானி டெப் இனிமேல் நடிக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜானிக்கு தற்போது 55 வயதாகிறது. இவர் 1983ல் அன்னி அல்லிசன் என்பவரை மணந்து, இரண்டே வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின் ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை கடந்த 2015ஆம் ஆண்டு மணந்துகொண்டார் ஜானி டெப். பின்னர், இவரையும் 2017ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

சமீபத்தில் ஜானிடெப் மீது அம்பெர் ஹெர்ட் அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கடுமையாக விமர்சித்து, அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். இது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனாலேயே பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில், அம்பெர் ஹெர்ட் தனது புகழை கெடுக்கும் நோக்கில் அவதூறுகளை பரப்பியதாகவும் இதன் காரணமாகவே தன்னை அப்படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் ஜானிடெப் குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்காக அம்பெர் ஹெர்ட் தனக்கு ரூ.355 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.