அமிதாப் பச்சன் நலம் பெற ஜான் சீனா வாழ்த்து! 

jhon cena

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களின் வீட்டில் பணிபுரிபவர்கள்கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிறைய பாலிவுட் நட்சத்திரங்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் இத்துயரிலிருந்து விரைவில் அமிதாப்பின் குடும்பம் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகரும் மல்யுத்தவீரருமான ஜான் சீனா அமிதாப்பின் குடும்பம் விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் இருவரது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக சுஷாந்தின் மறைவின்போது அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor amitabhbachchan jhon cena
இதையும் படியுங்கள்
Subscribe