ஸ்ரீ தேவி மகள் ஜான்வி மனதை கவர்ந்த நடிகர் 

jhanvi

நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு பிறகு தற்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு மாறியிருக்கும் அவரது மகள் ஜான்வி தற்போது மராத்தி மொழியில் மாபெரும் வெற்றிபெற்ற 'சாய்ரட்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகை ஜான்வி தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்து பேசுகையில்... "இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் என்னை கவர்ந்துவிட்டது" என கூறியுள்ளார். மேலும் அவரை விரைவில் ஸ்ரீ தேவி போல் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

sridevi sridevistatue
இதையும் படியுங்கள்
Subscribe