Advertisment

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

jhanvi kapoor to act south indian movies soon

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 இல் இந்தியில்வெளியான 'தடக்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களில் 'குஞ்சன் சக்ஸேனா' மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

கடைசியாக ஜான்வி நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் தென்னிந்தியப் படங்களின் இந்தி ரீமேக். 'கோலமாவு கோகிலா' படம்'குட் லக் ஜெரி' என்றும் 'ஹெலன்' என்ற மலையாளப் படம்'மிலி' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

Advertisment

இந்த நிலையில், ஜான்வி கபூர் தென்னிந்தியத்திரையுலகில் அறிமுகமாக உள்ளதாகத்தெரிவித்துள்ளார். ஆனால், அது எந்த மொழிப் படம் என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவிகுழந்தை நட்சத்திரமாகத்திரைத்துறையில் அறிமுகமான படம் 1967 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் 'கந்தன் கருணை'. பின்பு தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

jhanvi kapoor sridevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe