/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jayaprakash reddy.jpg)
தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உத்தமபுத்திரன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. ஆனால்தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக காலமானார். மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு வயது 73. இவர் கடைசியாக மகேஷ் பாபுவுடன் சரீலேரு நீக்கெவரு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)