Advertisment

"நாங்கெல்லாம் சீட்டு விளையாடுற கும்பல்" - 'ஜெயம்' ரவி சொன்ன ஜாலி சீக்ரட்

'ஜெயம்' ரவி... தமிழ் சினிமாவின் ஜென்டில், ப்லெசன்ட் நாயகன். பெண்களின் பேராதரவை பெற்ற சமகால ஹீரோ. சினிமாவில் அதிரடியென்றாலும் நேரில் பேச மென்மையானவர். இவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது 'கோமாளி'. படம் குறித்தும் வேறு பல விஷயங்கள் குறித்தும் அவரிடம் பேசினோம். அப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது பொழுதுபோக்குகள் செயல்பாடுகள் குறித்து பகிர்ந்தார்.

Advertisment

jeyam ravi

"என் வாழ்க்கை ஷூட்டிங் இருக்கும்போது ஒரு மாதிரி இருக்கும், ஷூட்டிங் இல்லாதப்போ வேற மாதிரி இருக்கும். ஷூட்டிங்கப்போ முழு கவனமும் முழு நேரமும் அதில்தான் இருக்கும். ஷூட்டிங் இல்லாதப்போ குழந்தைகளுடன் வெளியே போவோம், அப்பா அம்மாவை போய் பார்ப்போம். பிளே ஸ்டேஷன் 4 எனக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டில் குழந்தைகளுடன் எப்போதும் விளையாடுவேன். ஸ்நூக்கர் விளையாடப் போவேன். காலேஜ் அப்போ பழக்கமான பல விஷயங்கள் இப்போதும் தொடருது. முன்னாடி நிறைய கார்ட்ஸ் விளையாடுவோம். சினிமாவில் நான், ஜீவா, ஆர்யா எல்லாம் சீட்டு விளையாடுற கும்பல். முன்னாடி அடிக்கடி விளையாடுவோம். இப்போ எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. ஆனாலும் குடும்பத்தோட அப்பப்போ விளையாடுவோம். இதுதான் ஷூட்டிங் இல்லாதப்போ என் வாழ்க்கை."

Advertisment

jeyamravi komali
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe