Advertisment

சீதா கொடுத்த புகார்; போலீஸார் தீவிர விசாரணை

Jewelry stolen from actress Seethas house

Advertisment

80-களில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் சீதா. பின்பு அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி இப்போது வரை அதில் தொடர்கிறார். கடைசியாக கடந்த தீபாவளியன்று வெளியான பிரதர் படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் அவர், நகை திருடு போயுள்ளதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “தனது தம்பியின் மனைவி கல்பனா அவரது தங்க செயின், ஜிமிக்கி உள்ளிட்ட 4 1/2 பவுன் நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் எழுந்து பார்த்த போது அந்த 4 1/2 பவுன் தங்க நகைகளை காணவில்லை” எனக் குறிப்பிட்டு காணாமல் போன நகைகளை கண்டுபிடித்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

சீதாவின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சீதா வீட்டில் வேலை பார்த்து வரும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக பிரபலங்களின் வீடுகளில் நகை திருடு போயுள்ளதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பாடகர் விஜய் யேசுதாஸ் ஆகியோரைத் தொடர்ந்து சமீபத்தில் பார்த்திபனும் தனது அலுவலகத்தில் நகை திருடு போனதாக புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress police
இதையும் படியுங்கள்
Subscribe