ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், அதற்குள் இயக்குநர் மணி வர்மனின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ். கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தமன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
முரளி கபிர்தாஸ் தயாரிக்க திட்ட இயக்குநராக விஜயன் ரங்கராஜன், சி.இ.ஒ. டி செல்வகுமார் மற்றும் கிரியேடிவ் ஹெட் பணியை ஈரோடு மகேஷ் ஆகியோர் கவனிக்கின்றனர். இந்தப் படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது.
Follow Us