Advertisment

ரசிகர்களின் வரவேற்பை பெறும் ‘ஜென்ம நட்சத்திரம்’

316

அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஒரு நொடி’ பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளியான படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் என்பவர் இசையமைத்திருந்தார். 

Advertisment

இப்படத்தின் முன்னோட்டக் காட்சி மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் படம் முடிந்த பின் கண்ணீருடன் வெளியே வந்தனர். மேலும் படக்குழுவினருக்கு பாராட்டுகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினர்.  

முன்னதாக படம் வெளியாக சூழலில் படத்தை  தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் மீண்டும் இப்பட இயக்குநரை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார். இந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe