Advertisment

‘ஜென்ம நட்சத்திரம்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

jenma natchathiram first look released

1991ஆம் ஆண்டு வெளியான ஜென்ம நட்சத்திரம் படத்தின் அதே தலைப்பில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிக்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் என்பவர் இசையமைத்துள்ளார்.

Advertisment

முந்தைய படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பில் அதன் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

படம் குறித்து பேசிய இயக்குநர் பி. மணிவர்மன், “முந்தைய ஜென்ம நட்சத்திரம் போன்றே, இந்தப் படமும் பேசும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கான தலைப்பு அதன் அசல் ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம். படத்தை பார்க்கும் போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும்.

படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்," என்று தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல்வெளியிடுகிறார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe