Jeevitha Rajasekhar conformed his acting with rajini in lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தில் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியுடன் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் பேசுகையில், "ஐஸ்வர்யா எனக்கு நல்ல தோழி, ஒரு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக ஆலோசித்தார். பல ஆண்டுகளாக மக்கள் என்னைப் பார்க்காததால்புதிதாக இருக்கும் என்று வலியுறுத்தினார். அதனால் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ரஜினி சாருடன் இதுவரை எந்தப் படமும் நடித்ததில்லை. கடைசியாக அது நடப்பதில் மகிழ்ச்சி.குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இதுசாத்தியமில்லை. வரும் மார்ச் 7 ஆம் தேதி படப்பிடிப்பில் இணைகிறேன். என்னுடைய முக்கிய காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்படுகிறது” என்றார்.

Advertisment

நடிகை ஜீவிதா கடைசியாக 1990 ஆம் ஆண்டு வெளியான 'மகாடு' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் 'வளைகாப்பு' படத்தில் நடித்திருந்தார். இப்படம் 1988ல் வெளியானது. 'மகாடு' படத்திற்கு பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. இதனிடையே சில படங்களைதயாரித்தும் இயக்கியும் வந்தார். அந்த வகையில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு 'சேகர்' என்ற தலைப்பில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் என முன்னணி நடிகர்கள் நடிக்க தமன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள படப்பிடிப்பு முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே த.செ. ஞானவேல் இயக்கத்தில்நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது நினைவுகூரத்தக்கது.