8 தோட்டாக்கள் படத்தை தயாரித்த நிறுனத்தின் இரண்டாவது படம் ‘ஜீவி’. இந்த படத்திலும் அதே படத்தில் ஹீரோவாக நடித்த வெற்றிதான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு கதாநாயகளிகாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடித்திருந்தனர்.
முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
விமர்சன ரீதியாகவும் ‘ஜீவி’ படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.