/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1830.jpg)
பக்ரீத் படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கும் சிக்னேச்சர் படத்தில் ஜீவன், நட்டி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இளவரசு, ஹரிஷ் பெராடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் உள்ளிட்ட பலர் இப்படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை எம் 10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ் முருகராஜ் தயாரிக்கிறார்.
சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில் இயக்குநர் ஹரி கலந்து கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை, மும்பை மற்றும் துபாயில் நடைபெறவுள்ளது. நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதை தவறாக பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கை எப்படி மாற்றப்படுகிறது என்பதை சுவாரஸ்யமான ஆக்சன் படமாக சிக்னேச்சர் படம் இருக்கும் என படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)