Advertisment

சன்னி லியோன் டைரக்டர் படத்தில் ஜீவன்!

6.2, ஓரம்போ, வாத்தியார் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தன் வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் 'பாம்பாட்டம்'. காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Advertisment

svas

இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குகிறார். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முண்ணனி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள். அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்தின் நடிகர், நடிகையர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம் மாதம் நடைபெற உள்ளது. வி.சி வடிவுடையான் தற்போது சன்னி லியோனை வைத்து வீரமாதேவி படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

paambattam jeevan sunnyleone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe