Skip to main content

ஜீவா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்! 

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

hrhrdh

 

குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படைப்புகளை, ரசிக்கும் வண்ணம் கொடுக்கும், 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார். அவரது மகன் ஜீவா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை,  பிரபல இயக்குநர் சசியின் உதவியாளர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். தற்போதைக்கு இப்படம், 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் “தயாரிப்பு எண் 91” எனக் குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் நேற்று தொடங்கியது. இப்படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசும்போது...

 

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவராகத் திகழும் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப்பயணம் துவங்குவது, மிகப்பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. பல பெரும் கலைஞர்களுக்கும், இயக்குநர்களுக்கும் திரையுலகில் திறவுகோலாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் ஆர்.பி.சௌத்ரி.

 

அப்படியான நிறுவனத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம். இத்தருணம்  உற்சாகத்தையும், சுற்றிலும் நிறைய நேர்மறை எண்ணங்களையும் என்னுள் விதைத்திருக்கிறது. வழக்கமாக ரசிகர்கள், நடிகர்களையும், இயக்குநர்களையும் பார்த்து, அவர்களைப் பின்பற்றி படம் பார்த்து வந்த முறையை, தகர்த்தெறிந்தது 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' நிறுவனம். ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, தரமான குடும்பப் படங்களை, ரசிகர்கள் 100 சதவீதம் கொண்டாடும் வகையில் தொடர்ந்து தந்து வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளைக் கூட்டுவது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பை தவறாது பல தசாப்தங்களாக நிறைவேற்றி வந்திருக்கிறது. அதனால் தான், தென்னக சினிமாவின் முடிசூடா மன்னாக திகழ்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம். 

 

இது எனக்கு இரட்டை சந்தோஷ தருணம். ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளுல் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களைக் கவர்ந்தும் சாதனை படைத்தவர். 'மாஸ்' மற்றும் 'க்ளாஸ்' எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர். இயக்குநர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தபோது, படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். அப்படத்தில் அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

 

cnc

 

இயல்பிலேயே  மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களைத் தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தைக் கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனே தான் பழகுகிறார். இதுதான் எந்த ஒரு இயக்குநரும், அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும், இப்படம் தரப்போகும் மிகச்சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன். 

 

காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள் அவர்களோடு வி.டி.வி கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரையரங்கில் அடிதடி - தொண்டர்களால் பரபரப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
yatra 2 fans fight between jegam mogan reddy pawan kalyan

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'யாத்ரா 2' என எடுக்கப்பட்டுள்ளது.  ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துளளார். இப்படம் இன்று வெளியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் திரையரங்கிற்கு வந்து மேள தாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர்.  

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படம் கடந்த 7 ஆம் தேதி ரீ ரிலீஸாகியுள்ளது. இந்த சூழலில் இந்த தொண்டர்களின் அடிதடி சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்வவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Next Story

முதலமைச்சராக கவனம் ஈர்த்த ஜீவா

Published on 05/01/2024 | Edited on 06/01/2024
jiiva as cm jegan mogan reddy in yatra 2

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில், ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது.  

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு கண் தெரியாத நபர், ஜெகன் மோகன் ரெட்டி படம் பொருந்திய பதாகை வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் உட்காந்திருக்கிறார். அவரிடம் ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா பேசும் காட்சி வருகிறது. பின்பு அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த முரண்பாடுகள் குறித்த காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து அவர் நடத்திய யாத்ரா, சட்டமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் என நீள்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.