செக்கச் சிவந்த வானம் வந்தபின் தமிழ் சினிமாவில் பல மல்டிஸ்டார் படங்கள் வர தொடங்கிவிட்டது. நடிகார் ஜீவா, நண்பன், கலகலப்பு-2 போன்ற மல்ஸ்டார் படங்களில் முன்னமே நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் தற்போது மாபள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஜீவா மட்டுமின்றி, அவருடன் அருள்நிதியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதாநயகியாக மஞ்சிமா மோகன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஜீவா தன் சொந்த பேனரான சூப்பர்குட் ஃப்லீம்ஸ் நிறுவத்தில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment