Advertisment

வைரலாகும் வருண் சக்ரவர்த்தி வீடியோ... பிரபல நடிகர் வாழ்த்து!

varun chakravarthy

Advertisment

இந்த வருட ஐ.பி.எல் ஐக்கிய அமீரக நாடுகளான துபாய், அபு தாபி, ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழக வீரர்கள் பலரும் ஒவ்வொரு அணியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஹைதராபாத் அணிக்கு நடராஜன், பெங்களூரு அணிக்கு வாஷிங்டன் சுந்தர், பஞ்சாப் அணிக்கு முருகன் அஷ்வின் உள்ளிட்ட வீரர்கள் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக அளித்து வரும் நிலையில், மற்றொரு தமிழரான வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா அணிக்குச் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். இந்த ஆண்டின் ஐந்து விக்கெட் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகிறார்.

இவருடைய ஆட்டத்தைப் பார்த்த இந்திய அணிக்கான தேர்வாளர்கள், இவரை ஆஸ்திரேலியாவுடனான இந்தியா விளையாட இருக்கும் டி20 அணியில் ஒருவராகச் சேர்த்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் வருண்,கடந்த 2014ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான 'ஜீவா' என்னும் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்து, நடிகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான விஷ்ணு விஷால், 'இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வானதற்கு வாழ்த்துகள் வருண்' என்று தெரிவித்துள்ளார்.

varun chakravarthy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe