ஹிட் பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த ஜீவா

jeeva joins director rajasekar new film

கடந்த ஆண்டு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து நடிகர் ஜீவா சுந்தர் சி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனிடையே களத்தில் சந்திப்போம் படத்தின் இயக்குநர் ராஜசேகர் கூறிய கதை ஜீவாவிற்கு பிடித்துப்போகவே உடனே இப்படத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

MIK புரொடக்‌ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்பு பணிகளை மும்முரமாக தொடங்கியுள்ள படக்குழு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடித்து விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. படத்தின்கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருவதால்விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

jeeva tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe