/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-7_24.jpg)
ஜீவா, தமிழில் 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து 'காஃபி வித் காதல்' மற்றும் 'வரலாறு முக்கியம்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே 'ஜாகுவார் ஸ்டூடியோஸ்' தயாரிப்பில் பிரபல கன்னட இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்மால்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகிகளாக பயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் நடித்துள்ளனர். யோகி பாபு, சோனியா அகர்வால், மாளவிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘கோல்மால்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்போஸ்டரில் ஜீவா, மிர்ச்சி சிவா, பயல் ராஜ்புத், தான்யா ஹோப், யோகி பாபு மற்றும் மாளவிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களோடு வன விலங்குகளும் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்திற்காக உண்மையான காட்டு விலங்குகளுடன் படக்குழு படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. காமெடி அதிகம் நிறைந்து உருவாகியுள்ள இப்படம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)