Advertisment

"அதற்கான தேவை எனக்கு இல்லை" - ரசிகர்களால் அதிருப்தியடைந்த ஜீத்து ஜோசப்!

jeethu joseph

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘த்ரிஷ்யம்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், இதன் அடுத்த பாகமாக 'த்ரிஷ்யம் 3' வெளியாகுமா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர். இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய இயக்குநர் ஜீத்து ஜோசப், 'சரியான கதை அமைந்தால் அடுத்த பாகம் எடுப்பேன்' என விளக்கம் அளித்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d9f2fb79-3f3e-463f-830d-a535790b51a1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_2.png" />

Advertisment

இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர், 'த்ரிஷ்யம் 3' படத்திற்கான கதையை ஜீத்து ஜோசப் தேடிக்கொண்டிருக்கிறார். உங்களிடம் கதை இருந்தால் அனுப்பலாம் என ஜீத்து ஜோசப்பின் மின்னஞ்சல் முகவரியைக்குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதன் உண்மைத் தன்மையை சோதிக்காத ரசிகர்கள், ஆர்வத்துடன் தங்களிடம் உள்ள கதையை மின்னஞ்சல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால், ஜீத்து ஜோசப்பின் மின்னஞ்சல் முகவரியில் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் அதிருப்தியடைந்த ஜீத்து ஜோசப், காணொளி வாயிலாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தான் 'த்ரிஷ்யம் 3' படத்துக்கான கதையைத் தேடி வருவதாக சமூக ஊடகங்களில் உலவி வரும் செய்திகள் பொய்யானவை என்றும், பிறரிடமிருந்து கதை கேட்கும் தேவை தனக்கு இல்லை" என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe