/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/88_15.jpg)
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக்கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில்'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையில் உருவாகி வந்த இப்படம், இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக வாய்ப்பிருக்கிறதா என இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜீத்து ஜோசப் இதற்குப் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "கமல்ஹாசனின் முடிவைப் பொறுத்தே பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முடிவெடுக்க முடியும். அவர் அனுமதி கிடைத்தால் அப்படத்தை இயக்க நான் தயார்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)