JD Chakravarthy speech

Advertisment

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக வரும் ஜே.டி. சக்கரவர்த்தி, தமிழில் 'சர்வம்', 'கச்சேரி ஆரம்பம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர். நடிப்பை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இந்தி மாற்றம் தெலுங்குதிரையுலகில் இயங்கி வருகிறார்.

இந்நிலையில், தன்னை விஷம் கொடுத்து கொலை செய்ய சதி நடந்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "எனக்கு மது, சிகரெட் உள்ளிட்ட எந்த ஒரு போதைப்பொருள் பழக்கமும் இல்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டேன். இது குறித்து நிறைய பேரிடம் சிகிச்சை பெற்றும் என்ன நோய் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகி உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறினர். எனக்கு வேண்டிய ஒருவர் 8 மாதங்களாக ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதைநாகார்ஜுனா என்ற டாக்டர்கண்டுபிடித்தார்'' என்றார்.