/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/137_29.jpg)
விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படம் கமிட்டாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக்கூறப்பட்டது.
இப்படத்தை எஸ். தாணு தயாரிப்பதாகத்திரை வட்டாரங்கள்தெரிவித்தன. இந்த நிலையில் இப்படத்தின் வில்லனை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயராம் தற்போது விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் மோதவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஆண்ட்ரியா நடிப்பில் மிஸ்கின் இயக்கியுள்ள 'பிசாசு 2' படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)