/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_163.jpg)
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில் தான் நடித்த இரண்டாவது படமான ‘என் வீடு அப்புவிண்டேயும்' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார்.
இவர் கடைசியாக தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார். இவர் மாடலிங் துறையைச் சார்ந்த தாரினியை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்பு இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமண நிச்சயம் நடந்தது. தாரிணி, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021-ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்-பாக இருந்தார். மேலும் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_206.jpg)
இந்த நிலையில் காளிதாஸ் - தாரினி இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது. திருமண அழைப்பிதழை திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என கொடுக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது மனைவி மற்றும் மகன் காளிதாஸுடன் இணைந்து ஜெயராம் திருமண அழைப்பிதழ் வழங்கினார். இது தொடர்பான புகைபப்டத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த காளிதாஸ் ஜெயராம், “முதல் அழைப்பிதழ்” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் திருமண தேதியை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)