Advertisment

இந்தியளவில் ட்ரெண்டான ஜெயம் ரவி பட ஃபர்ஸ்ட் லுக்...

அடங்க மறு வெற்றிபெற்றதை அடுத்து ஜெயம் ரவி புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் கோமாளி என்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

comali

தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒன்பது வேடங்களில் நடித்தவர் சிவாஜி கணேஷன். நவராத்திரி என்னும் படத்தின் மூலம் நடிகர் திலகம் நடித்திருப்பார். அவரை தொடர்ந்து ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து கமல்ஹாசன், புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

இவ்விருவரையும் அடுத்து தமிழ் சினிமாவில் அதிக வேடங்களில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்திருக்கிறாராம் ஜெயம் ரவி. இதில்தான் சுமார் 9 வேடங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஜெயம் ரவியுடன் முதன் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Advertisment

alt="net" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8f111bae-725b-45a2-9856-69190f195316" height="125" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_3.png" width="366" />

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என சொல்லப்பட்டது. அறிவிக்கப்பட்டதை போன்றே இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த போஸ்டரில் ஜெயம் ரவி டிரிப்ஸ் ஏற்றிய நிலையில் தலை குழம்பியவர் போல போஸ் கொடுத்துள்ளார். கோமாளி என்ற டைட்டிலில் ஆறு வருடங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியான சற்று நேரத்திலேயே இந்தியளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இப்படத்தில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறாராம்.

comali jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe