/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/62_28.jpg)
ஜெயம் ரவி, 'பூமி' படத்தை தொடர்ந்து 'அகிலன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை 'பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'அகிலன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலின் ஒரு பகுதியின் ஹார்பரில் வாழும் ஒருவனின் வாழ்க்கையை பற்றி விவரிக்கும் வகையில் இந்த டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பெரும்பாலான படப்பிடிப்பு இந்திய பெருங்கடலில் படக்குழு படமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் எனப்படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)